Blog

அமரர் கலாநிதி ஆ. கந்தையா நினைவுரை – டாக்டர் நடேசன்.

அமரர் கலாநிதி கந்தையா  வாழ்வும் பணிகளும்அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்தை ஆவணப்படுத்திய எழுத்தாளர்!                                                நடேசன்  –  அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவில் 13  வருடங்கள் உதயம் இதழை நடத்திவிட்டு நிறுத்திய பின்பு என்னிடம் இருந்த ஒளிப்படங்களைப் பார்த்தபோது அதிக அளவில் இருந்த படங்கள் கலாநிதி கந்தையாவுடையதாகும். உதயம் பத்திரிகையை ஆரம்பித்தபோது எனக்கு அறிமுகமானவர்கள் பலர். அவர்களில் ஒருவர் சிட்னியிலிருந்து உதயத்திற்கு அடிக்கடி விடயதானங்களும் ஒளிப்படங்களும் அனுப்பிக்கொண்டிருந்த கலாநிதி ஆ.கந்தையா.           அவர் தனது நிகழ்ச்சியொன்றை அனுப்பி விட்டு அதைபிரசுரிக்கச்  சொன்னபோது மறுத்துவிட்டேன். அந்த…

“புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்” அங்கம்-07 -முருகபூபதி

அவுஸ்திரேலியாவில்நாவல்-சிறுகதை இலக்கியம் சிறுகதை  நாவல்  இலக்கிய வடிவங்கள்  எமக்கு மேனாட்டினரிடமிருந்து கிடைக்கப்பெற்றதாக விமர்சகர்கள் இன்றுவரையில் பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்ச்சூழலில் எமது முன்னோர்கள் சிறந்த கதைசொல்லிகளாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை     ஏனோ மறந்துவிடுகின்றோம். தொலைக்காட்சியின் வருகைக்குப்பின்னர்  கதைகேட்கும் ஆர்வம் குழந்தைகளுக்கும் இல்லை. கதைசொல்ல  பாட்டா, பாட்டிமாருக்கும்  அக்கறை  இல்லை. இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இவர்கள் தொலைக்காட்சி நாடகங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  அவுஸ்திரேலியா தமிழ்ச்சூழலும்  அதற்கு விதிவிலக்கல்ல.       பகல்பொழுதில்  வேலைக்குச் சென்றதனால்  தொலைக்காட்சித்தொடர்களை  பிரத்தியேகமாக பதிவுசெய்ய  வழிசெய்துவிட்டு    –   மாலை வீடு திரும்பியதும்   …

“புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்” அங்கம்-06 -முருகபூபதி

 ( மதுரை உலகத் தமிழ்ச்சங்கமும் அவுஸ்திரேலியத் தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து நடத்திய  காணொளி ஆய்வரங்கில்  சமர்ப்பிக்கப்பட்ட  கட்டுரை)  அவுஸ்திரேலியாவில் கவிதை இலக்கியம், ” கவிதையாக்கங்குறித்து முரண்பட்ட இரண்டு எண்ணங்கள் எம்மிடையே நிலவுகின்றன. இயல்பாகச் சிலருக்கு அமைந்த ஒருவகைப் படைப்பாற்றலின் வெளிப்பாடே கவிதை என்பர் ஒரு சாரார். இலக்கண இலக்கியங்களை கற்றுத்தேர்ந்தவர்கள், பயிற்சியினாற் பாடுவது கவிதை என்பர் மற்றொரு சாரார். இவ்விரு கூற்றுக்களிலே ஒன்றே உண்மை என்று நாம் ஏற்கவேண்டியதில்லை. அதுமட்டுமன்று, ஒன்றை மாத்திரம் பிரதானப்படுத்துவது, உண்மையைத்தேடும்…

“புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்” அங்கம்-05 -முருகபூபதி

 ( மதுரை உலகத் தமிழ்ச்சங்கமும் அவுஸ்திரேலியத் தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து நடத்திய  காணொளி ஆய்வரங்கில்  சமர்ப்பிக்கப்பட்ட  கட்டுரை)                                           தமிழ் எழுத்தாளர் விழா இயக்கமும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் ! விக்ரோரியா ,  நியூசவுத்வேல்ஸ்,  குவின்ஸ்லாந்து, கன்பரா, மேற்கு – தெற்கு  அவுஸ்திரேலிய  மாநிலங்களில்  எழுத்தார்வமுடன் இயங்குபவர்களை இனங்கண்டுகொண்டதன் விளைவாக 2001 ஆம் ஆண்டில்  உருவானதே அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழா இயக்கம்.   “  அறிந்ததைப்பகிர்தல், அறியாததை அறிந்து கொள்ள முயல்தல்   “  என்ற சிந்தனையை  அடியொற்றி,  கலையும்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

collageஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணைய இதழ் பூமராங் 01-01-2017 முதல் உங்கள் பார்வைக்கு வருகிறது.

சங்கத்தின் உத்தியோகபூர்வ ஏடாக இதனை உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கின்றோம். எமது சங்கத்தின் வளர்ச்சியின் ஊடாக மற்றும் ஒரு பரிமாணத்தில் பூமராங் இணைய இதழில் சங்கமிக்கின்றோம்.

சங்கத்தின் செய்திகள், சங்க உறுப்பினர்களின் படைப்புகள் மற்றும் அகில உலகரீதியான தமிழ் கலை, இலக்கிய ஆக்கங்கள், படைப்பிலக்கிய மொழிபெயர்ப்புகள் , நூல் மதிப்பீடுகள், வாசகர் பக்கம், உட்பட பல பதிவுகளை அவ்வப்போது பூமராங்கில் பார்க்கமுடியும்.

இதனை படிப்பவர்களின் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம்.

தங்கள் எண்ணங்களை  பின்வரும் மின்னஞ்சல்கள்  ஊடாக தெரிவிக்கலாம்.

லெ. முருகபூபதி
பூமராங் இணையத்தள நிர்வாகி
letchumananm@gmail.com