ஆங்கிலம் சர்வதேச மொழி. அதனால் ஏராளமான பிறமொழி இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன. ருஷ்ய இலக்கிய மேதைகள் லியோ டோல்ஸ்ரோய், மாக்ஸிம் கோர்க்கி உட்பட பல படைப்பாளிகளின் எழுத்துக்களை ஆங்கில மொழிபெயர்ப்பின் ஊடாகவே சிலர் அவற்றை தமிழுக்குத்தந்தனர். பல மேனாட்டு மொழிகளை தெரியாத தமிழர்கள் அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பின் ஊடாகவே அந்தநாட்டு இலக்கியங்களை படித்தனர்.
