Categories
Uncategorized

சுந்தா’ சுந்தரலிங்கம் நினைவுகள்

நினைவலைகள்: சந்திரமண்டலத்தியல்  கண்டுதெளிந்த    சாதனையை வானலைகளில்  பரவச்செய்த  அப்பல்லோ  ‘சுந்தா’ சுந்தரலிங்கம் ‘மனஓசையில்’ மனந்திறந்து பேசியிருக்கும் வானொலி  ஊடகவியலாளரின்  கலைப்பயணம் — முருகபூபதி ” நான் என் வாழ்வில் என்றுமே சிகரெட் புகைத்ததில்லை. ஆனாலும் நிறைய  சிகரெட் விளம்பரங்கள் செய்ய நேர்ந்திருக்கிறது. த்ரீ ரோஸஸ் ( Three roses)  என்றொரு சிகரெட்டுக்காகப் புகையை உள்ளிழுத்து  அனுபவித்து, ஆ…ஆ… என்று  வெளிவிட்டு விளம்பரப்படுத்தும் விளம்பரத்திற்கு  நான் குரல் கொடுத்திருந்தேன். மிகப்பிரபலமாக  அது  ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. அவ்வேளை பம்பலப்பிட்டி  சரஸ்வதி  மண்டபத்தில் […]

Categories
Uncategorized

எழுத்தாளர், ஆய்வாளர், நடிகர், ஒளிப்படக்கலைஞர் கலைவளன் சிசு. நாகேந்திரன் முதிய வயதிலும் தமிழ் அகராதி எழுதியவர்

முருகபூபதி காலம்  தரித்து  நிற்பதில்லை.   அதனால்  வயதும்  முன்னோக்கியே நகர்ந்து கொண்டிருக்கும்.   இறுதியில்  முதுமை  வரும்பொழுது  உடன் வருவது  தனிமை,   இயலாமை,   நனவிடை  தோயும் இயல்பு,   எல்லாம்  போதும்  என்ற  மனப்பான்மை. ஆயினும் –  முதுமையிலும்  ஒருவர்  அயராமல்  இயங்கினார் என்பது கொடுப்பினை.     மருத்துவனையில்  தங்கியிருக்கும் வேளையிலும்  தமிழ்  அகராதியொன்றை   தயாரிப்பதற்காக குறிப்புகளை    பதிவு செய்துகொண்டிருந்தவர்.  அவருக்கு 97 வயதாகப்போகிறது.   எம்மத்தியில்  வாழும்  அந்த     மூத்தவர்  பற்றியதே   இந்தப்பதிவு. அவர்தான்   அவுஸ்திரேலியா  மெல்பனில்  வதியும்  பல்துறை ஆற்றல்  […]

Categories
Uncategorized

திருவள்ளுவரும் திருக்குறளும்

– சங்கர சுப்பிரமணியன் உலகப் பொதுமறை என்ற உன்னத சிறப்புடைத்து திருகுறள். தெய்வப்புலவர் என்ற புகழுக்கு உரியவர் திருவள்ளுவர். இச் சிறப்புக்குக் காரணம் எக்காலத்துக்கும் எந்நாட்டவர்க்கும் எம் மதத்தவர்க்கும் பொதுவாய் திருக்குறள் நிற்பதுதான். இதிலிருந்தே தெரிகிறது திருக்குறள் ஒரு மதநூல் அல்ல என்று. மதம் என்பதே மனிதனைப் பிரித்துவைக்கும் விதம் தான். ஒவ்வொரு மதமும் தனித்தனி கொள்கை, தனித்தனி வழிபாடு என்று உலகில் வாழும் மக்களை தனித்தனி திட்டாக பிரித்துவைக்கிறது. உலகிற்கே பொதுமறையாய் நின்று கருத்துரைக்கும் ஒரு நூல் திட்டு திட்டாய் நிற்கும் […]

Categories
Uncategorized

சிட்னியில் முதியோர் இல்லத்தில் நனவிடை தோயும் கல்விமான்

தமிழ்  உலகில்  கொண்டாடப்படவேண்டிய  தகைமைசார் பேராசிரியர்   பொன். பூலோகசிங்கம்   முருகபூபதி எங்கள்  நாவலர்,  “ வசனநடை  கைவந்த  வல்லாளர்  ஆறுமுகநாவலர் “ –  என்று  அறிந்திருக்கின்றோம்.   தமிழ்நாட்டில்  கடலூரில்  ஒரு காலத்தில்   வள்ளலார்  சுவாமிகளுக்கு  எதிராக  நீதிமன்றில்  அவர்  வழக்காடியதையும்  அறிந்திருப்போம். ஆனால்,  அவர்  தமது  இளமைக்காலத்தில்  கோபமும்  மூர்க்க  குணமும் கொண்டவர்   என்பதை  அறிந்திருப்போமா  ?  தமது  உறவினர்  மீது  தமக்கு வந்த  கோபத்தை  வெளிப்படுத்துவதற்கு    ஒரு  கத்தியை  எடுத்துக்கொண்டு அவர்   துரத்திய […]

Categories
Uncategorized

கவிஞர் அம்பியின் வாழ்வும் பணிகளும்

“புலம்பெயர்ந்து ஓடிடும் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கும் மூத்த எழுத்தாளர்” – முருகபூபதி ஏறினால் கட்டில், இறங்கினால் சக்கரநாற்காலி. அத்தகைய ஒரு வாழ்க்கையை அவுஸ்திரேலியா சிட்னியில் கடந்துகொண்டிருக்கும் ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி அவர்கள் அண்மையில் தனது 88 ஆவது  வயதைக் கடந்திருக்கிறார். எனினும்,  நினைவாற்றலுடன் தனது கடந்த கால வாழ்க்கைப் பயணத்தை நம்முடன் தொலைபேசி ஊடாக பகிர்ந்துகொண்டார். அன்பின் மறுபெயர் அம்பி என சில வருடங்களுக்கு முன்னர் மல்லிகை, ஞானம் அட்டைப்பட அதிதி கட்டுரையில் இவர் பற்றி […]

Categories
Uncategorized

ஆவணகத்தில் திரு முருகபூபதி

http://aavanaham.org/islandora/search/dc.creator%3A%22%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%2C%5C%20%E0%AE%B2%E0%AF%86.%22  

Categories
Uncategorized

அடிசில்

காலச்சுவடு நாட்காட்டி “அடிசில்” பேசும் நளபாகத்தில் இலக்கிய ஆளுமைகளின் அர்த்தமுள்ள வரிகள். முருகபூபதி “ஒரு காலைக்காட்சி. வெள்ளைச்சட்டையில், இரட்டைப்பின்னல் போட்ட  இரண்டாம் வகுப்பு மாணவி நான். சைக்கிள் மிதித்து விரைகிறேன். வேம்பும் வாகையும் பனையும் நிழல்தர, மா, பலா, வாழை, தென்னை, கனிகள் நிறைந்து செழித்த ஊர் அது. பாடசாலை போகும் பாதை. ஒவ்வொரு வீட்டைக்கடக்கும்போதும் காற்றில் ஒவ்வொரு வாசம்.

Categories
கட்டுரைகள் Uncategorized

அவுஸ்திரேலியா மொழிபெயர்ப்பு முயற்சிகள் – முருகபூபதி

  ஆங்கிலம்  சர்வதேச  மொழி.  அதனால்   ஏராளமான  பிறமொழி இலக்கியங்கள்  ஆங்கிலத்தில்  மொழிபெயர்க்கப்படுகின்றன.  ருஷ்ய இலக்கிய   மேதைகள்  லியோ  டோல்ஸ்ரோய்,  மாக்ஸிம்  கோர்க்கி உட்பட பல   படைப்பாளிகளின்  எழுத்துக்களை   ஆங்கில  மொழிபெயர்ப்பின்  ஊடாகவே  சிலர்  அவற்றை  தமிழுக்குத்தந்தனர்.  பல  மேனாட்டு  மொழிகளை தெரியாத   தமிழர்கள்  அவற்றின்  தமிழ்  மொழிபெயர்ப்பின்  ஊடாகவே   அந்தநாட்டு  இலக்கியங்களை  படித்தனர்.

Categories
வெளியீடுகள் Uncategorized

உயிர்ப்பு (2005)

அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்கள் சிலரதும் அவுஸ்திரேலியாவிற்கு வந்து சென்ற ( சங்கத்தின் நிகழ்ச்சிகளுடன் தொடர்புடைய) சில எழுத்தாளர்களினதும் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு உயிர்ப்பு. இலங்கையில் பதிப்பிக்கப்பட்டு சங்கத்தின் ஐந்தாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் வெளியிடப்பட்டது. சாந்தா ஜெயராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி, கல்லோடைக்கரன், உஷா ஜவஹார், களுவாஞ்சிக்குடி யோகன், தெ. நித்தியகீர்த்தி, ‘ரதி ‘உஷா சிவநாதன், புவனா இராஜரட்ணம், செ. ரவீந்திரன், அ. சந்திரஹாசன், மாத்தளை சோமு, நல்லைக்குமரன், அருண். விஜயராணி, த. கலாமணி, தி.ஞானசேகரன், யோகன், ஆசி. […]

Categories
Uncategorized

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு

அவுஸ்திரேலியாவில்  பலவருடங்களாக இயங்கிவரும்  தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின்   ஆண்டுப்பொதுக்கூட்டம் 26/11/2016 ஆம் திகதி  மெல்பனில் மல்கிரேவ் Neighborhood House  மண்டபத்தில்  நடைபெற்றது. சங்கத்தின் துணைத்தலைவர் திரு. லெ.முருகபூபதியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் , உலகெங்கும் போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால்  உயிரிழந்தவர்களுக்காகவும்  கடந்த  ஆண்டு இறுதியில்  மறைந்த   முன்னாள் தலைவரும் எழுத்தாளருமான திருமதி அருண். விஜயராணியை  நினைவுகூர்ந்தும்  மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. 2015-2016 ஆம் ஆண்டுகளின் காலப்பகுதிக்கான ஆண்டறிக்கையும் நிதியறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. சங்கத்தின் புதிய நடப்பாண்டுக்கான […]