அமரர் கலாநிதி கந்தையா வாழ்வும் பணிகளும்அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்தை ஆவணப்படுத்திய எழுத்தாளர்! நடேசன் – அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவில் 13 வருடங்கள் உதயம் இதழை நடத்திவிட்டு நிறுத்திய பின்பு என்னிடம் இருந்த ஒளிப்படங்களைப் பார்த்தபோது அதிக அளவில் இருந்த படங்கள் கலாநிதி கந்தையாவுடையதாகும். உதயம் பத்திரிகையை ஆரம்பித்தபோது எனக்கு அறிமுகமானவர்கள் பலர். அவர்களில் ஒருவர் சிட்னியிலிருந்து உதயத்திற்கு அடிக்கடி விடயதானங்களும் ஒளிப்படங்களும் அனுப்பிக்கொண்டிருந்த கலாநிதி ஆ.கந்தையா. அவர் தனது நிகழ்ச்சியொன்றை அனுப்பி விட்டு அதைபிரசுரிக்கச் சொன்னபோது மறுத்துவிட்டேன். அந்த […]
Category: நினைவுப் பகிர்வுகள்

தனது 99 வயதினை நெருங்கும் வேளையில் எம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார் மூத்த எழுத்தாளரும் நாடக, கூத்து கலைஞரும் சமூகப்பணியாளரும் ஒளிப்படக்கலைஞருமான கலைவளன் சிசு நாகேந்திரன். நீண்டகாலம் அவுஸ்திரேலியா மெல்பனை வதிவிடமாகக்கொண்டிருந்தவர். ஒரு சில வருடங்களுக்கு முன்னர் அவரது புதல்வியும் பேரப்பிள்ளைகளும் அவரை சிட்னிக்கு அழைத்துச்சென்று, அங்கு ஒரு முதியோர் காப்பகத்தில் பராமரித்துக்கொண்டிருந்தனர். யாழ். நல்லூர் இவரது பூர்வீகம் எனச்சொல்லப்பட்டாலும், பிறந்தது கேகாலையில் 1921 ஆம் ஆண்டில். இவரது பிறந்த தினம் ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி. அந்நாளைய […]

தெ. நித்தியகீர்த்தி (1947 – 2009) பருத்தித்துறை, புலோலியில் பிறந்த இவர் சிறுகதை, நாவல், நாடகம் முதலான துறைகளில் ஈடுபாடு கொண்ருந்தவர். இலங்கையின் வடபகுதியிலான நாடக மேடையேற்றங்களூடும், தினகரன் பத்திரிகையில் பிரசுரமான கடவுள் கதைப்பாரா என்ற சிறுகதையூடும் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர்.

அருண் விஜயராணி ( 1954 – 2015) புலம்பெயர்ந்த மூத்த பெண் படைப்பாளிகளில் ஒருவர். 1989 ஆம் ஆண்டில் இருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வாழ்ந்து வந்தவர்.

காவலூர் ராசதுரை என அழைக்கப்படும் மரியாம்பிள்ளை டேவிட் ராஜதுரை ( 1931 – 2014) இலங்கையில் காவலூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், மதிப்பாய்வு, திரைப்படம் முதலான துறைகளில் ஈடுபாடு கொண்டவர். புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியா சிட்னி நகரில் வாழ்ந்து வந்தவர்.
எஸ்.பொ

எஸ்.பொ. என அறியப்படும் சண்முகம் பொன்னுத்துரை ( 1932 – 2014) சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், சுயசரிதை, மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40 இற்கும் மேற்பட்ட நூல்களை வரவாக்கியவர். 1989 முதல் புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியா சிட்னியில் இருந்தவாறு தமிழ்நாட்டில் சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.