” கவிதையாக்கங்குறித்து முரண்பட்ட இரண்டு எண்ணங்கள் எம்மிடையே நிலவுகின்றன. இயல்பாகச் சிலருக்கு அமைந்த ஒருவகைப் படைப்பாற்றலின் வெளிப்பாடே கவிதை என்பர் ஒரு சாரார். இலக்கண இலக்கியங்களை கற்றுத்தேர்ந்தவர்கள், பயிற்சியினாற் பாடுவது கவிதை என்பர் மற்றொரு சாரார். இவ்விரு கூற்றுக்களிலே ஒன்றே உண்மை என்று நாம் ஏற்கவேண்டியதில்லை. அதுமட்டுமன்று, ஒன்றை மாத்திரம் பிரதானப்படுத்துவது, உண்மையைத்தேடும் முயற்சிக்கு வீணே வரம்புகட்டுவதுமாகும்.” இவ்வாறு நான்கு தசாப்தங்களுக்கு முன்பே, பேராசிரியர் க. கைலாசபதியும் கவிஞர் இ.முருகையனும் இணைந்து எழுதியிருக்கும் கவிதை நயம் என்னும் […]
Category: நிகழ்வுகள்
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் 08 ஆம் திகதி (08-06-2019) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தமிழ் – சிங்கள இலக்கிய மொழிப்பரிவர்த்தனை தொடர்பான கருத்தரங்கு – கண்காட்சி – காணொளிக்காட்சி என்பன மெல்பனில் வேர்மண் தெற்கு கல்வி நிலையத்தில் ( Vermon South Learning Centre ) சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும். முகவரி: Vermon South Learning Centre – Karobran Drive, Vermon South , […]
அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும் பத்தி எழுத்தாளருமான விலங்கு மருத்துவர் நடேசன் இதுவரையில் எழுதியிருக்கும் நாவல்கள், சிறுகதைகள், தொழில் சார் அனுபவ நூல்கள் மற்றும் பயண இலக்கியம் தொடர்பான அறிமுகமும் விமர்சன அரங்கும் எதிர்வரும் 08 ஆம் திகதி (08-06-2019) சனிக்கிழமை மெல்பனில் நடைபெறும். நடேசன் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரே இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கியவர். இவரது விலங்கு மருத்துவத்துறை சார்ந்த கதைகளை உள்ளடக்கிய நூல் வாழும் சுவடுகள் இதுவரையில் இரண்டு பதிப்புகளைக்கண்டுள்ளன. இதுவே இவரது முதலாவது நூலாகும். […]
சிட்னியில் கலை – இலக்கியம் 2017
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி (02-12-2017) சனிக்கிழமை, சிட்னியில் கலை – இலக்கியம் 2017 நிகழ்ச்சி நடைபெறும். சிட்னியில் Blacktown என்னுமிடத்தில் அமைந்த Sydwest Multicultural Services மண்டபத்தின் ( 1/ 125, Main Street, Blacktown, N.S.W.2148) முதலாவது தளத்தில் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும் சிற்பி அறக்கட்டளை விருது பெற்றவருமான கவிஞர் எஸ். வைதீஸ்வரன், இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள எழுத்தாளரும் […]
அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் கடந்த 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மெல்பனில் வேர்மண் தெற்கு சமூக மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெற்றது. ஆண்டுப்பொதுக்கூட்டத்திற்கு முன்னர், இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளரும் சமூகப்பணியாளரும் ‘ செங்கதிர்’ இதழின் ஆசிரியருமான செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன், ” கிழக்கிலங்கையின் கலை இலக்கிய செல்நெறி” என்னும் தலைப்பில் உரையாற்றினார். அவரது உரையைத்தொடர்ந்து இடம்பெற்ற வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில், கனடாவில் வதியும் செழியன் எழுதிய, வானத்தைப்பிளந்த […]