Categories
வெளியீடுகள் Uncategorized

உயிர்ப்பு (2005)

அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்கள் சிலரதும் அவுஸ்திரேலியாவிற்கு வந்து சென்ற ( சங்கத்தின் நிகழ்ச்சிகளுடன் தொடர்புடைய) சில எழுத்தாளர்களினதும் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு உயிர்ப்பு. இலங்கையில் பதிப்பிக்கப்பட்டு சங்கத்தின் ஐந்தாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் வெளியிடப்பட்டது. சாந்தா ஜெயராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி, கல்லோடைக்கரன், உஷா ஜவஹார், களுவாஞ்சிக்குடி யோகன், தெ. நித்தியகீர்த்தி, ‘ரதி ‘உஷா சிவநாதன், புவனா இராஜரட்ணம், செ. ரவீந்திரன், அ. சந்திரஹாசன், மாத்தளை சோமு, நல்லைக்குமரன், அருண். விஜயராணி, த. கலாமணி, தி.ஞானசேகரன், யோகன், ஆசி. […]

Categories
அறிக்கைகள்

எழுத்தாளர் விழாக்கள்

            2001 – மெல்பன்                        2011 – மெல்பன்              2002 –  சிட்னி                             2012 மெல்பன்              2003 – மெல்பன்                      […]

Categories
Uncategorized

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு

அவுஸ்திரேலியாவில்  பலவருடங்களாக இயங்கிவரும்  தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின்   ஆண்டுப்பொதுக்கூட்டம் 26/11/2016 ஆம் திகதி  மெல்பனில் மல்கிரேவ் Neighborhood House  மண்டபத்தில்  நடைபெற்றது. சங்கத்தின் துணைத்தலைவர் திரு. லெ.முருகபூபதியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் , உலகெங்கும் போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால்  உயிரிழந்தவர்களுக்காகவும்  கடந்த  ஆண்டு இறுதியில்  மறைந்த   முன்னாள் தலைவரும் எழுத்தாளருமான திருமதி அருண். விஜயராணியை  நினைவுகூர்ந்தும்  மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. 2015-2016 ஆம் ஆண்டுகளின் காலப்பகுதிக்கான ஆண்டறிக்கையும் நிதியறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. சங்கத்தின் புதிய நடப்பாண்டுக்கான […]

Categories
Uncategorized

ஆண்டறிக்கை – Annual Report (2015-2016)

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். விக்ரோரியா மாநிலத்தில்  பதிவுசெய்யப்பட்ட எமது சங்கத்தின்     2015 – 2016 காலப்பகுதிக்கான ஆண்டறிக்கையை இத்துடன் சமர்ப்பிக்கின்றோம்.

Categories
படைப்பாளிகள்

கௌரவம் பெற்ற படைப்பாளிகள், கலைஞர்கள்

ஓவியர் ‘ஞானம்’ ஞானசேகரம்   நீண்டகாலமாக ஓவியத்துறையில் தமது ஆற்றல்களை வெளிப்படுத்திவரும் ‘ஞானம் ஆர்ட்ஸ்’ ஞானம் அவர்களின் ஓவியக்கண்காட்சிகள் மெல்பன், சிட்னி. கன்பரா ஆகிய மாநகரங்களில் நடைபெற்றுள்ளன. ஓவியர் ஞானம் அவர்கள் மெல்பனில் நடந்த மூன்றாவது தமிழ்  எழுத்தாளர் விழாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.   திருமதி ஞானசக்தி நவரட்ணம் தையல்கலையில் நுட்பமான வேலைப்பாடுகளை பதிவுசெய்து அற்புதமன காட்சிகளை கலாரசிகர்களுக்குப்படைக்கும் திருமதி ஞானசக்தி நவரட்ணம் அவர்கள் இந்தத்துறையில் நீண்டகாலம் பயிற்சி பெற்றவர். அவரது தையற்கலைக்கண்காட்சி மெல்பனில் நடந்த மூன்றாவது […]

Categories
எழுத்தாளர்கள் நினைவுப் பகிர்வுகள் படைப்பாளிகள்

தெ. நித்தியகீர்த்தி

தெ. நித்தியகீர்த்தி (1947 – 2009)  பருத்தித்துறை, புலோலியில் பிறந்த இவர்  சிறுகதை, நாவல், நாடகம் முதலான துறைகளில்  ஈடுபாடு கொண்ருந்தவர். இலங்கையின் வடபகுதியிலான நாடக மேடையேற்றங்களூடும், தினகரன் பத்திரிகையில் பிரசுரமான கடவுள் கதைப்பாரா என்ற சிறுகதையூடும் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர்.

Categories
எழுத்தாளர்கள் நினைவுப் பகிர்வுகள் படைப்பாளிகள்

அருண் விஜயராணி

அருண் விஜயராணி ( 1954 –  2015) புலம்பெயர்ந்த மூத்த பெண் படைப்பாளிகளில் ஒருவர். 1989 ஆம் ஆண்டில் இருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வாழ்ந்து வந்தவர்.

Categories
எழுத்தாளர்கள் நினைவுப் பகிர்வுகள் படைப்பாளிகள்

காவலூர் ராசதுரை

காவலூர் ராசதுரை என அழைக்கப்படும் மரியாம்பிள்ளை டேவிட் ராஜதுரை ( 1931 –  2014) இலங்கையில் காவலூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், மதிப்பாய்வு, திரைப்படம் முதலான துறைகளில் ஈடுபாடு கொண்டவர். புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியா  சிட்னி நகரில் வாழ்ந்து வந்தவர்.

Categories
எழுத்தாளர்கள் நினைவுப் பகிர்வுகள் படைப்பாளிகள்

எஸ்.பொ

எஸ்.பொ. என அறியப்படும் சண்முகம்  பொன்னுத்துரை ( 1932 –  2014) சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், சுயசரிதை, மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40 இற்கும் மேற்பட்ட நூல்களை வரவாக்கியவர். 1989 முதல் புலம் பெயர்ந்து  அவுஸ்திரேலியா சிட்னியில் இருந்தவாறு   தமிழ்நாட்டில் சென்னையில்  மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி  நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.