அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் 08 ஆம் திகதி (08-06-2019) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தமிழ் – சிங்கள இலக்கிய மொழிப்பரிவர்த்தனை தொடர்பான கருத்தரங்கு – கண்காட்சி – காணொளிக்காட்சி என்பன மெல்பனில் வேர்மண் தெற்கு கல்வி நிலையத்தில் ( Vermon South Learning Centre ) சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும். முகவரி: Vermon South Learning Centre – Karobran Drive, Vermon South , […]
Author: atlaswriters
அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும் பத்தி எழுத்தாளருமான விலங்கு மருத்துவர் நடேசன் இதுவரையில் எழுதியிருக்கும் நாவல்கள், சிறுகதைகள், தொழில் சார் அனுபவ நூல்கள் மற்றும் பயண இலக்கியம் தொடர்பான அறிமுகமும் விமர்சன அரங்கும் எதிர்வரும் 08 ஆம் திகதி (08-06-2019) சனிக்கிழமை மெல்பனில் நடைபெறும். நடேசன் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரே இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கியவர். இவரது விலங்கு மருத்துவத்துறை சார்ந்த கதைகளை உள்ளடக்கிய நூல் வாழும் சுவடுகள் இதுவரையில் இரண்டு பதிப்புகளைக்கண்டுள்ளன. இதுவே இவரது முதலாவது நூலாகும். […]
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த ஆண்டுப் ொதுக்கூட்டம் கடந்த 4 ஆம் திகதி ஞாயிறன்று மெல்பனில் Keysborough Secondary College மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் 2017 – 2018 காலப்பகுதியில் சங்கம் மேற்கொண்ட பணிகளை விபரிக்கும் ஆண்டறிக்கையை செயலாளர் மருத்துவர் நடேசன் சமர்ப்பித்தார்.அதனையடுத்து, நிதியறிக்கையை நிதிச்செயலாளர் முருகபூபதி சமர்ப்பித்தார். சங்கத்தின் நிதிநிலைமையை கருத்தில்கொண்டு உறுப்பிர்களிடம் நன்கொடைகளை பெறவேண்டும் என்று திரு. ந. சுந்தரேசனும், மீண்டும் சங்கத்தில் ஆயுள்கால […]

மெல்பனில் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி — ரஸஞானி மெல்பனில் வதியும் ஓவியர் மொஹம்மட் நஸீர் அவர்கள் நீண்டகாலமாக ஓவியத்துறையில் ஈடுபட்டுவரும் கலைஞர். இவர் யாழ்ப்பாணத்தில் 1955 ஆம் ஆண்டு காலத்தில் நகரபிதாவாக ( மேயர்) பதவியிலிருந்த (அமரர்) எம்.எம். சுல்தான் அவர்களின் புதல்வராவார். இவருடைய தாய் மாமனார்தான் இலங்கையின் மூத்த தமிழ் அறிஞரும் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபரும் செனட்சபை உறுப்பினருமான ( அமரர்) ஏ. அஸீஸ் அவர்கள். இவ்வாறு புகழ்பூத்த குடும்பத்திலிருந்து வந்திருக்கும் ஓவியர் நஸீர் […]

தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்: எழுத்தாளர்களின் பங்களிப்பும் பணிகளும் — கலாநிதி அமீர் அலி ( பொருளியல்துறை – மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா) (அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் மெல்பனில் நடைபெற்ற நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்ட உரை) இத்தலைப்பிலே ஒரு பெரும் சிக்கலுண்டு. அதனைத் தெளிவுபடுத்துதல் முதலில் அவசியம். தமிழ் என்பது ஒரு மொழியின் பெயர். முஸ்லிம் என்பது ஒரு மதத்தவரின் பெயர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் மொழிவாரியாக நோக்கின் தமிழரே. எனவே தமிழரென்ற […]
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இன நல்லிணக்கம் தொடர்பான இலக்கிய கருத்தாடல் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி ( 08-07-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரையில் மெல்பனில்வேர்மண் தெற்கு சமூகமண்டபத்தில் ( Karobran Drive, Vermont South, Victoria 3133) இன நல்லிணக்கம் தொடர்பான இலக்கிய கருத்தாடல் நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், […]

சிங்களத்திரைப்படங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்திய லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் சிங்கள படைப்பிலக்கியங்களை திரைக்கு வழங்கிய முன்னோடிக் கலைஞர் ஜெயகாந்தனுடன் அமர்ந்து “உன்னைப்போல் ஒருவன்” பார்த்த ரசிகர் முருகபூபதி “உலகிலேயே மிகவும் ஏமாற்றமளிப்பது, (75 ஆண்டுச்சரித்திரமுள்ள) இந்தியச் சினிமாத்துறைதான். தென்னிந்தியாவில் உருவாகும் சினிமாப்படங்களில் 20 வீதம் மட்டும் வர்த்தகரீதியாகவாவது வெற்றிபெறுகின்றன. உயர்ந்ததோர் கலைமரபைக்கொண்டது தென்னிந்தியா. தென்னிந்தியாவின் சங்கீதம் உலகிலேயே முதன்மையான ஒன்று. தென்னிந்தியரின் நடனம், உலகெங்குமுள்ளவர்களால் மிகவும் போற்றி ரசிக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் பண்டைக்காலச்சிற்பங்கள், ஈடிணையற்றவை. இப்படியாக ஒரு உன்னதமானதும், […]
பழந்தமிழ் இலக்கியத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்கும் பாலமாக விளங்கும் பாலம் லக்ஷ்மணன் அம்மையார் — முருகபூபதி இந்தப்பதிவில் நான் “அம்மா” எனக்குறிப்பிடுவது, “அவுஸ்திரேலியாவிலும் உலகடங்கிலும் எதிர்காலத்திலும் தமிழ் வாழவேண்டும்” என்ற கனவுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர் பற்றியே! பொதுவாகவே அம்மாமாருக்குத்தான் அதிகம் கனவுகள் இருக்கும். அவை தமது சந்ததி குறித்தும் அவர்களின் வளமான வாழ்வுபற்றியதுமாகவே தொடரும். எனக்கு இலங்கையிலும் புகலிட தேசத்திலும் நீண்டகாலமாக நன்குதெரிந்த ” தமிழ் அம்மா” திருமதி பாலம் லக்ஷ்மணன் அவர்கள், பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன தமிழ் […]
சிட்னியில் கலை – இலக்கியம் 2017
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி (02-12-2017) சனிக்கிழமை, சிட்னியில் கலை – இலக்கியம் 2017 நிகழ்ச்சி நடைபெறும். சிட்னியில் Blacktown என்னுமிடத்தில் அமைந்த Sydwest Multicultural Services மண்டபத்தின் ( 1/ 125, Main Street, Blacktown, N.S.W.2148) முதலாவது தளத்தில் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும் சிற்பி அறக்கட்டளை விருது பெற்றவருமான கவிஞர் எஸ். வைதீஸ்வரன், இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள எழுத்தாளரும் […]
அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் கடந்த 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மெல்பனில் வேர்மண் தெற்கு சமூக மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெற்றது. ஆண்டுப்பொதுக்கூட்டத்திற்கு முன்னர், இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளரும் சமூகப்பணியாளரும் ‘ செங்கதிர்’ இதழின் ஆசிரியருமான செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன், ” கிழக்கிலங்கையின் கலை இலக்கிய செல்நெறி” என்னும் தலைப்பில் உரையாற்றினார். அவரது உரையைத்தொடர்ந்து இடம்பெற்ற வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில், கனடாவில் வதியும் செழியன் எழுதிய, வானத்தைப்பிளந்த […]