அமரர் கலாநிதி கந்தையா வாழ்வும் பணிகளும்அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்தை ஆவணப்படுத்திய எழுத்தாளர்! நடேசன் – அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவில் 13 வருடங்கள் உதயம் இதழை நடத்திவிட்டு நிறுத்திய பின்பு என்னிடம் இருந்த ஒளிப்படங்களைப் பார்த்தபோது அதிக அளவில் இருந்த படங்கள் கலாநிதி கந்தையாவுடையதாகும். உதயம் பத்திரிகையை ஆரம்பித்தபோது எனக்கு அறிமுகமானவர்கள் பலர். அவர்களில் ஒருவர் சிட்னியிலிருந்து உதயத்திற்கு அடிக்கடி விடயதானங்களும் ஒளிப்படங்களும் அனுப்பிக்கொண்டிருந்த கலாநிதி ஆ.கந்தையா. அவர் தனது நிகழ்ச்சியொன்றை அனுப்பி விட்டு அதைபிரசுரிக்கச் சொன்னபோது மறுத்துவிட்டேன். அந்த […]
Author: atlaswriters

அவுஸ்திரேலியாவில்நாவல்-சிறுகதை இலக்கியம் சிறுகதை நாவல் இலக்கிய வடிவங்கள் எமக்கு மேனாட்டினரிடமிருந்து கிடைக்கப்பெற்றதாக விமர்சகர்கள் இன்றுவரையில் பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்ச்சூழலில் எமது முன்னோர்கள் சிறந்த கதைசொல்லிகளாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை ஏனோ மறந்துவிடுகின்றோம். தொலைக்காட்சியின் வருகைக்குப்பின்னர் கதைகேட்கும் ஆர்வம் குழந்தைகளுக்கும் இல்லை. கதைசொல்ல பாட்டா, பாட்டிமாருக்கும் அக்கறை இல்லை. இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இவர்கள் தொலைக்காட்சி நாடகங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவுஸ்திரேலியா தமிழ்ச்சூழலும் அதற்கு விதிவிலக்கல்ல. பகல்பொழுதில் வேலைக்குச் சென்றதனால் தொலைக்காட்சித்தொடர்களை பிரத்தியேகமாக பதிவுசெய்ய வழிசெய்துவிட்டு – மாலை வீடு திரும்பியதும் […]
( மதுரை உலகத் தமிழ்ச்சங்கமும் அவுஸ்திரேலியத் தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து நடத்திய காணொளி ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை) அவுஸ்திரேலியாவில் கவிதை இலக்கியம், ” கவிதையாக்கங்குறித்து முரண்பட்ட இரண்டு எண்ணங்கள் எம்மிடையே நிலவுகின்றன. இயல்பாகச் சிலருக்கு அமைந்த ஒருவகைப் படைப்பாற்றலின் வெளிப்பாடே கவிதை என்பர் ஒரு சாரார். இலக்கண இலக்கியங்களை கற்றுத்தேர்ந்தவர்கள், பயிற்சியினாற் பாடுவது கவிதை என்பர் மற்றொரு சாரார். இவ்விரு கூற்றுக்களிலே ஒன்றே உண்மை என்று நாம் ஏற்கவேண்டியதில்லை. அதுமட்டுமன்று, ஒன்றை மாத்திரம் பிரதானப்படுத்துவது, உண்மையைத்தேடும் […]
( மதுரை உலகத் தமிழ்ச்சங்கமும் அவுஸ்திரேலியத் தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து நடத்திய காணொளி ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை) தமிழ் எழுத்தாளர் விழா இயக்கமும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் ! விக்ரோரியா , நியூசவுத்வேல்ஸ், குவின்ஸ்லாந்து, கன்பரா, மேற்கு – தெற்கு அவுஸ்திரேலிய மாநிலங்களில் எழுத்தார்வமுடன் இயங்குபவர்களை இனங்கண்டுகொண்டதன் விளைவாக 2001 ஆம் ஆண்டில் உருவானதே அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழா இயக்கம். “ அறிந்ததைப்பகிர்தல், அறியாததை அறிந்து கொள்ள முயல்தல் “ என்ற சிந்தனையை அடியொற்றி, கலையும் […]
( மதுரை உலகத் தமிழ்ச்சங்கமும் அவுஸ்திரேலியத் தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து நடத்திய தொடர் ஆய்வரங்கில், மெல்பனிலிருந்து காணொளியூடாக சமர்ப்பிக்கப்பட்ட உரை ) நாம் வாழும் அவுஸ்திரேலியா பயண இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ளதையும் நாம் கவனித்தல் வேண்டும். பல வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்து சென்றிருக்கும் இதயம்பேசுகிறது மணியன் ஆஸ்திரேலியப் பயணக்கதையை எழுதியவர். ஆனந்தவிகடனில் துணை ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் பல நாடுகளுக்கும் சென்றுவந்திருக்கும் அவர், இதயம்பேசுகிறது என்ற தலைப்பில்தான் அந்தத் தொடரை எழுதிவந்தார். அதனால் […]
அவுஸ்திரேலியாவில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் அவுஸ்திரேலியா பல்லின கலாசார நாடு. பல மொழி பேசும், பல இனத்தவர்கள் , பல தேசத்தவர்கள் வாழும் ஒரு குடியேற்ற நாடு. ஒப்பீட்டளவில் இலங்கையின் சனத்தொகைதான் இந்தப்பெரிய கண்டத்திலும் என்பது குடிசனமதிப்பீடு தெரிவிக்கும் உண்மை. வெள்ளை இனத்தவர்களிடம் ஆட்சி அதிகாரம் இருந்தபோதிலும் இத்தேசத்தின் பூர்வீக உரிமைக்குரியவர்கள். அபோர்ஜனிஸ் இனத்தவர்கள் என்று முன்னரே குறிப்பிட்டிருந்தோம். இவர்களில் பல குழுமங்கள் இருக்கின்றன. அவர்களிடத்திலும் வரிவடிவமற்ற பேச்சுமொழிகள் புழக்கத்திலிருக்கின்றன. இந்த இனத்தைச்சேர்ந்த ஹென்றி லோசன் என்பவர் புகழ்பெற்ற […]
கையெழுத்துப் பிரதி முதல் கணினி இதழ் வரையில்… அவுஸ்திரேலியாவில் தமிழ் இதழ்களின் வருகையை கையெழுத்து ஏடுகளிலிருந்துதான் அவதானித்தல் வேண்டும். 1988 – 1989 காலப்பகுதியில் சிட்னியிலிருந்து எழுத்தாளர் மாத்தளைசோமு தமிழ்க்குரல் என்ற கையெழுத்துப்பிரதியை ஆரம்பித்தார். பின்னர் அதே பெயரில் ஒரு பதிப்பகமும் நடத்தி நூல்களை தமிழகத்தில் அச்சிட்டு பெற்றார். அதே காலப்பகுதியில் மெல்பனில் சில நண்பர்கள் இணைந்து அரசியல் – சமூக விமர்சன ஏடாக மக்கள் குரல், செய்திச்சுடர் முதலான கையெழுத்து ஏடுகளை வெளிக்கொணர்ந்தனர். கணினியில் தமிழ் […]
( மதுரை உலகத் தமிழ்ச்சங்கமும் அவுஸ்திரேலியத் தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து நடத்திய தொடர் ஆய்வரங்கில், மெல்பனிலிருந்து காணொளியூடாக சமர்ப்பிக்கப்பட்ட உரை ) அறிமுக உரை: ஜான்ஸி ராணி – மதுரை முருகபூபதி, லெட்சுமணன் (1951.07.13) இலங்கையில் நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர். இவரது தந்தை லெட்சுமணன். முருகபூபதி இலங்கையில் நீர்கொழும்பூரில் தற்போதைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 இல் விவேகானந்தா வித்தியாலயம் என்னும் பெயரில் தொடங்கப்பட்ட போது அதன் முதலாவது மாணவராகச் சேர்ந்தார். பின்னர் […]

தனது 99 வயதினை நெருங்கும் வேளையில் எம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார் மூத்த எழுத்தாளரும் நாடக, கூத்து கலைஞரும் சமூகப்பணியாளரும் ஒளிப்படக்கலைஞருமான கலைவளன் சிசு நாகேந்திரன். நீண்டகாலம் அவுஸ்திரேலியா மெல்பனை வதிவிடமாகக்கொண்டிருந்தவர். ஒரு சில வருடங்களுக்கு முன்னர் அவரது புதல்வியும் பேரப்பிள்ளைகளும் அவரை சிட்னிக்கு அழைத்துச்சென்று, அங்கு ஒரு முதியோர் காப்பகத்தில் பராமரித்துக்கொண்டிருந்தனர். யாழ். நல்லூர் இவரது பூர்வீகம் எனச்சொல்லப்பட்டாலும், பிறந்தது கேகாலையில் 1921 ஆம் ஆண்டில். இவரது பிறந்த தினம் ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி. அந்நாளைய […]
” கவிதையாக்கங்குறித்து முரண்பட்ட இரண்டு எண்ணங்கள் எம்மிடையே நிலவுகின்றன. இயல்பாகச் சிலருக்கு அமைந்த ஒருவகைப் படைப்பாற்றலின் வெளிப்பாடே கவிதை என்பர் ஒரு சாரார். இலக்கண இலக்கியங்களை கற்றுத்தேர்ந்தவர்கள், பயிற்சியினாற் பாடுவது கவிதை என்பர் மற்றொரு சாரார். இவ்விரு கூற்றுக்களிலே ஒன்றே உண்மை என்று நாம் ஏற்கவேண்டியதில்லை. அதுமட்டுமன்று, ஒன்றை மாத்திரம் பிரதானப்படுத்துவது, உண்மையைத்தேடும் முயற்சிக்கு வீணே வரம்புகட்டுவதுமாகும்.” இவ்வாறு நான்கு தசாப்தங்களுக்கு முன்பே, பேராசிரியர் க. கைலாசபதியும் கவிஞர் இ.முருகையனும் இணைந்து எழுதியிருக்கும் கவிதை நயம் என்னும் […]