இலக்கியப்படைப்பாளரும் பத்திரிகையாளருமான லெ.முருகபூபதியின் புதிய நூல் சொல்லவேண்டிய கதைகள் வெளியீட்டு நிகழ்வும், முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி ஆவணப்படம் திரையிடலும் எதிர்வரும் 30-09-2017 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மெல்பனில், பிரஸ்டன் நகர மண்டபத்தில் ( Preston City (Shire) Hall – Gower Street, Preston 3072) நடைபெறும்.
சொல்லவேண்டிய கதைகள் யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து வெளியாகும் ஜீவநதி இதழின் புதிய வெளியீடாகும்.
இந்நூல் முருகபூபதியின் 21 ஆவது நூல் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ரஸஞானி ஆவணப்படம் மெல்பன் எழுத்தாளர் செல்லமுத்து கிருஷ்ணமூர்த்தியின் தயாரிப்பு இயக்கத்தில் வெளியாகிறது. இதன் ஒளி, ஒலிப்பதிவு: மெல்பன் கலை, இலக்கிய ஆர்வலர் எஸ். கிருஷ்ணமூர்த்தி.
மருத்துவ கலாநிதி (திருமதி) வஜ்னா ரஃபீக், தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சி, செல்வி மோஷிகா பிரேமதாசவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும்.
திருமதிகள் கலாதேவி பாலசண்முகன், ரேணுகா தனஸ்கந்தா, சாந்தி சிவக்குமார், கலாநிதி (திருமதி) கௌசல்யா அந்தனிப்பிள்ளை ஆகியோர் நூல் விமர்சனவுரை நிகழ்த்துவர். முருகபூபதி ஏற்புரை நிகழ்த்துவார்.
இந்நிகழ்ச்சியை திருமதி மாலதி முருகபூபதி, திரு. செல்லமுத்து கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஒழுங்குசெய்துள்ளனர்.
கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு:
திருமதி மாலதி முருகபூபதி
panchanathanmurugapoopathy.mala@gmail.com
0404 659 983
திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தி
sellakrish@gmail.com
0402 418 304