அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழாவின் ஒரு மைல்கல்லாக 2010 ஆம் ஆண்டு நடந்த பத்தாவது எழுத்தாளர் விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட கலை இலக்கிய தொகுப்பு மலர் பூமராங். இந்தப்பெயரைச்சூட்டியவர் சங்கத்தின் உறுப்பினர் எஸ். கிருஷ்ணமூர்த்தி.
சங்கத்தின் வரலாறு உட்பட சிறுகதை, கட்டுரை, ஆய்வு, கவிதை, ஊடகம் , மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், முதலான துறைகளில் பல ஆக்கங்கள் பதிவாகிய சிறப்பு மலர் பூமராங்.
லெ. முருகபூபதி, எஸ். கிருஷ்ணமூர்த்தி,எஸ். சிவசம்பு, கானா பிரபா, பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா, கௌசல்யா அன்ரனிப்பிள்ளை, மாலதி முருகபூபதி, நடேசன், பாலம் லக்ஷ்மணன், உரும்பையூர் நவரத்தினம் அல்லமதேவன், காவலூர் ராஜதுரை, வசந்தன், தெய்வீகன், கல்லோடைக்கரன், ஆவூரான், மெல்பன் மணி, இளமுருகனார் பாரதி, ஆழியாள், உஷா ஜவஹார், யாழ். பாஸ்கர், கே.எஸ். சுதாகரன், அருண். விஜயராணி, சிசு. நாகேந்திரன், ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்ற மலர் பூமராங்.