அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் ‘கலைவளன்’ சிசு நாகேந்திரன் எழுதிய பிறந்த மண்ணும் புகலிடமும் நூல் 2008 ஆம் ஆண்டில் வெளியாகியது.
தாயக வாழ்வும் புலம்பெயர் வாழ்வுக்கோலங்களும் தலைமுறை இடைவெளிப் பிரச்சினைகள், கலாசார வேறுபாடுகளுக்கு மத்தியில் இயந்திரமயமான – இரண்டகமான வாழ்க்கை முறைகளை சித்திரிக்கும் கட்டுரைகள் இடம்பெற்ற பிறந்த மண்ணும் புகலிடமும் நூலுக்கு, நூலின் ஆசிரியர் எடுத்த ஒளிப்படங்களே முகப்பினை அலங்கரித்தன. நூலாசிரியர் ‘கலைவளன்’ சிசு நாகேந்திரன் ஒளிப்படக்கலைஞர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.