அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்கள் சிலரதும் அவுஸ்திரேலியாவிற்கு வந்து சென்ற ( சங்கத்தின் நிகழ்ச்சிகளுடன் தொடர்புடைய) சில எழுத்தாளர்களினதும் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு உயிர்ப்பு. இலங்கையில் பதிப்பிக்கப்பட்டு சங்கத்தின் ஐந்தாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் வெளியிடப்பட்டது.
சாந்தா ஜெயராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி, கல்லோடைக்கரன், உஷா ஜவஹார், களுவாஞ்சிக்குடி யோகன், தெ. நித்தியகீர்த்தி, ‘ரதி ‘உஷா சிவநாதன், புவனா இராஜரட்ணம், செ. ரவீந்திரன், அ. சந்திரஹாசன், மாத்தளை சோமு, நல்லைக்குமரன், அருண். விஜயராணி, த. கலாமணி, தி.ஞானசேகரன், யோகன், ஆசி. கந்தராஜா, கே.எஸ்.சுதாகர், ஆவூரான் ஆகியோரின் சிறுகதைகள் இடம்பெற்ற உயிர்ப்பு தொகுதிக்கு சிட்னியில் வதியும் ஓவியர் ‘ஞானம்’ ஞானசேகரம் முகப்போவியம் வரைந்தார்.
இந்நூலை லெ. முருகபூபதி தொகுத்துள்ளார்.