கவிதை, கட்டுரை, சிறுகதை, பத்தி எழுத்து, நேர்காணல், விமர்சனம் முதலான துறைகளில் எழுதிவரும் மெல்பனில் வதியும் அவூரான் சந்திரன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு ஆத்மாவைத்தொலைத்தவர்கள். 2008 இல் சிட்னியில் நடந்த எட்டாவது தமிழ் எழுத்தாளர் விழாவிலும் அதே ஆண்டு மெல்பனில் நடந்த கலை இலக்கியம் 2008 நிகழ்விலும் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கான முகப்போவியத்தை சிட்னியில் வதியும் ஓவியர் ‘ ஞானம் ‘ ஞானசேகரம் வரைந்துள்ளார்.
தாயகத்தினதும் புகலிடத்தினதும் வாழ்வுக்கோலங்களை சித்திரிக்கும் சிறுகதைகள் இடம்பெற்ற தொகுதி ஆத்மாவைத்தொலைத்தவர்கள்.